VYmYXXDwGAcGwaUdDTcY.jpg

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு


கூத்தாண்டவர் கோயில்: உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருநங்கைகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

வைகை அணை நிலவரம்: அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர் மட்டம் சரிவு.  71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம், கடந்த 8ம் தேதி 55.27 கடியாக இருந்த நிலையில், தற்போது மேலும் குறைந்து 53.67 அடியாக உள்ளது.

  • May 14, 2025 23:09 IST

    தப்பிச்செல்ல முயன்ற நபரை சுட்டுப்பிடித்த போலீசார்

    கோவையில் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நபரை சுட்டுப்பிடித்த போலீசார். குற்ற வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்ற போது நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு

  • May 14, 2025 23:06 IST

    பொள்ளாச்சி வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு. நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் வழங்க உத்தரவு

  • May 14, 2025 21:23 IST

    மதுபோதையில்’ அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் உடனடியாக பணி இடைநீக்கம்

    கோவை பொள்ளாச்சியில் மதுபோதையில்’ அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த நடத்துனரிடம், இது குறித்து விசாரணை நடத்தி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • May 14, 2025 20:09 IST

    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் செல்போனுக்குத் தடை

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக  கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது, காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் செல்போன்கள், உடைமைகள் வைக்கும் நவீன தானியங்கி லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுளளது.

  • May 14, 2025 20:08 IST

    கொடைக்கானலில் காட்டெருமைக்கு கத்தரிக்காய் வழங்கிய நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    கொடைக்கானலில், காட்டெருமைக்கு கத்தரிக்காய் வழங்கிய இருவருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில்,இதுபோன்ற சூழலில் வன விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

  • May 14, 2025 20:07 IST

    வளர்ப்பு நாய் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

    ஈரோடு, சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் தம்பதியரின் வளர்ப்பு நாய் மர்மான முறையில் உயிரிழப்பு 2 நாய்கள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • May 14, 2025 20:06 IST

    இளைஞரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகள்

    மதுரையில் சாலையில் சென்ற இளைஞரை போதை ஆசாமிகள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

  • May 14, 2025 18:10 IST

    மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்

    போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

  • May 14, 2025 17:18 IST

    அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்

  • May 14, 2025 16:33 IST

    4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

  • May 14, 2025 16:29 IST

    வடகாடு விவகாரம் : சமாதான கூட்டம்

    வடகாடு விவகாரம் – இரு தரப்பினரும் எவ்வித அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது. இரு தரப்பினரும் பிரச்சினைக்குரிய இடத்தை பயன்படுத்தக் கூடாது.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒப்புதல்

  • May 14, 2025 15:14 IST

    செல்லூர் ராஜு-க்கு வன்மையான கண்டனம் – ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக் தலைவர் ஆவேசம் 

    “படை வீரர்களை இழிவாக பேசிய செல்லூர் ராஜு-க்கு வன்மையான கண்டனங்கள். இவரது பேச்சால் அகில இந்திய அளவில் ராணுவ வீரர்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள்” என்று ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக் தலைவர் அரசு ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

     

  • May 14, 2025 15:07 IST

    சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு – மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்

    கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை  புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், “குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா?, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?, இது ஜனநாயக நாடு. சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.” என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்கள் 
     
    இது தொடர்பாக கரூர் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., வருவாய் மண்டல அலுவலர், விழாக்குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

  • May 14, 2025 14:52 IST

    8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. 

    தென்மேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல், ஒரு  வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

  • May 14, 2025 14:39 IST

    கோவை போலீசாருக்கு பேட்டரி ஃபேன் வசதி கொண்ட ஹெல்மெட் 

    கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி ஃபேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கினார் காவல் ஆணையர். முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

  • May 14, 2025 14:03 IST

    நெல்லையில் மேலும் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

    நெல்லையில் மேலும் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார்  பைக் ஷோரூம் வாசலில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற இளைஞர்கள். முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், பைக் ஷோரூம் வாசலிலும் வீசப்பட்டுள்ளது. 

  • May 14, 2025 13:56 IST

    “குறிப்பிட்ட சமூகத்தினர்தான் விழா நடத்த வேண்டுமா?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா?; மற்றவர்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?; இது ஜனநாயக நாடு. கரூர் நெரூர் அம்மன் கோயில் தேரை பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட கோரிய மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

  • May 14, 2025 13:29 IST

    கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

    கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வாக்குவததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும்  முறைக்கு எதிராக வாக்குவாதம் நடந்துள்ளது. 

  • May 14, 2025 13:14 IST

    வடகாடு விவகாரம் – ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

    புதுக்கோட்டை, வடகாடு கோவில் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. புதுக்கோட்டை ஆட்சியர், மத்திய மண்டல ஐஜி,  புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

  • May 14, 2025 13:14 IST

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை 2 நாட்களாக போராடி \ மீட்ட தீயணைப்பு வீரர்கள். அபாய எச்சரிக்கை பலகை வைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

  • May 14, 2025 12:56 IST

    திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    நெல்லை: முன்னீர்பள்ளத்தில் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; வீட்டில் இருந்த கார் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன; இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டு வீசியது சிசிடிவியில் பதிவு; இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • May 14, 2025 12:32 IST

    உதகை அரசு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

    நீலகிரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. மருத்துவமனையில் உள்ள MRI, CT ஸ்கேன் மையம், அறுவை சிகிச்சை பிரிவை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

  • May 14, 2025 11:21 IST

    கடன் தொல்லை – 4 பேர் தற்கொலை

    திருச்சியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகள் இருவருக்கு விஷம் கொடுத்து விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • May 14, 2025 10:52 IST

    யூடியூபர் ஜி.பி.முத்துவின் வீடு முற்றுகை

    உடன்குடி, கீழத்தெருவை காணவில்லை என ஆட்சியரிடம் புகார் அளித்திருந்த ஜி.பி.முத்து   கொடுத்திருக்கும் புகாருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • May 14, 2025 10:09 IST

    சேலம் மத்திய சிறை பேக்கரியில் பணமோசடி – வார்டன் சஸ்பெண்ட்

    சேலம் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் விற்கப்படும் பொருட்களுக்கு தனது மாமியாரின் ஜிபே கணக்கு மூலம் பணம் பெற்று வந்த சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டாக சுமார் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருட்கள் விற்பனையாகும் அதே நேரத்தில் சிறையின் கணக்கில் குறைந்த தொகையே வரவு வந்திருப்பதால் நடத்தப்பட்ட விசாரணையில் வார்டன் சுப்பிரமணி மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது.  

  • May 14, 2025 09:48 IST

    திருப்பத்தூர்: ஏரியில் தவறி விழுந்து இளைஞர் பலி

    திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் ஏரியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலாஜி (22) என்பவர் நேற்றிரவு இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு சென்றவர், கால் இடறி விழுந்து சேற்றில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், இன்று காலை ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்

  • May 14, 2025 09:33 IST

    திருச்சியில் 2 மகள்களை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை

    திருச்சி மேல கண்டார்கோட்டை பகுதியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உடல்களை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக விபரீத முடிவு என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

  • May 14, 2025 09:18 IST

    வைகை அணை நிலவரம்

    அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர் மட்டம் சரிவு. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம், கடந்த 8ம் தேதி 55.27 கடியாக இருந்த நிலையில், தற்போது மேலும் குறைந்து 53.67 அடியாக உள்ளது.

  • May 14, 2025 09:17 IST

    கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருநங்கைகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Shopping Cart
Scroll to Top